Saturday, December 20, 2008

புஷ்ஷுக்கு செருப்படி!இராக்கில் உச்சகட்ட மரியாதை!!











அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு வீர பூமியான ஈராக்கில் கிடைத்துள்ள வழியனுப்பு மரியாதை(!) பூமிப் பந்தெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அடிமேல் அடிவாங்கிய நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபருக்கு ஈராக்கில் கிடைத்த உச்சக்கட்ட அவமானம் அந்நாட்டு மக்களின் விடுதலை வேட்கைக்கு சான்று கூறுவதாக அமைந்தது. ஈராக்கில் அமெரிக்கப் படைகள் 2011ஆம் ஆண்டு வரை இருப்பதற்கான ஒரு அடிமை சாசனத்தை பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் தனது அடிமைகளான ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி மற்றும் அதிபர் ஜலால் தலபானி இருவரின் முன்னிலையிலும் நிறைவேற்றி அதுகுறித்து உரையாற்றும் போது அதிபர் புஷ் செருப்படி வாங்கினார்.


பத்திரிகையாளர் சந்திப்பில் புஷ் உரையாற்றும் போது அல் பக்தாதியா தொலைக்காட்சி சேனலின் செய்தியாளர் முன்ததர் அல் ஜைதி ஆவேசமாக எழுந்து “ஈராக் மக்களின் வழியனுப்பு முத்தம் இது நாயே’’ என அரபி மொழியில் சிங்கமென கர்ஜித்து தனது ஷூவை வீசினார். ஈராக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக, பாதிக்கப்பட்ட விதவைகளுக்காக, அநாதைகளுக்காக என கூறிக்கொண்டே அடுத்த ஷூவையும் அந்த மாவீரன் (ஷூவீரன்) முன்ததர் வீசினார். அந்த ஷூவின் அளவு 10 என்பது தெரிய வந்துள்ளது. புஷ்ஷுக்கு கிடைத்துள்ள உச்சபட்ச மரியாதை (!) உலகெங்கும் மகிழ்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக கொடுங்கோலர்களின் வரிசையில் முதலிடம் பெறும் ஜார்ஜ் புஷ்ஷை இனி ஜார்ஜ் புஷ்-ஷூ என யாராவது அழைத்தால் அவர் வெறுப்படையக் கூடும். பேரிலேயே ஷூவை வைத்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வெறியனுக்கு கிடைத்த ஷூ மரியாதை (!) ஒரு தொடக்கம் என்றே கருதப்படுகிறது.



Tuesday, December 2, 2008

மும்பை அட்டாக் : முஸ்லீம் அமைப்புகள் கண்டனம்

மும்பை தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனக்குரல்கள் வந்துகொண்டிருக்கிறது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அம்மத்தைச் சேர்ந்தவர்களும் கண்டனகுரல் கொடுத்திருக்கிறார்கள். முஸ்லீம் அமைப்பான அகில இந்திய சிறுபான்மையினர் முன்னனியின் தேசியத்தலைவர் எஸ்.எம்.ஆஸிப்,’மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள். இஸ்லாத்தில் பயங்கரவாதத்துக்கு ஒரு போதும் இடமில்லை.
பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த பாதுகாப்பு படையினரின் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன். பயங்கரவாதிகள் பிடியிலிருந்து மும்பை நகரை மீட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதலுக்கு மேலும் பல இஸ்லாம் அமைப்புகளும் கண்டனக்குரல் கொடுத்திருக்கின்றன

Friday, November 28, 2008

ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பிலும் தொடர்பு! பெண் சாமியார் சிக்குகிறார்!!







மாலேகான் குண்டுவெடிப்பு தொடர் பாக குற்றம்சாட்டப்பட்ட பெண் பயங்க ரவாதி பிரக்யாசிங் மற்றும் ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னல் புரோஹிதர் என்ற அதிகாரி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் சிலரும் சதிச்செயலில் தொடர்பு டையவர்களாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இந்தியாவை பரபரப்பில் ஆழ்த்தின.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தீவிரவாத தடுப்புப் படையினரும் இவர் களை கண்காணித்தே தீரவேண்டிய நிலைக்கு அவர்களின் பயங்கரவாதச் செயல்களின் விளைவு இருந்தது. சங் பரிவார் சதிவலைப் பின்னல்கள் இந்தியா முழுவதும் பரவி நாட்டையே அபாயத்தில் கொண்டு சென்றுள்ளதாக நடுநிலை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியான பெண் சாமி யாரை ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிக்க விரும்பு வதாக ஆந்திர மாநில காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஹிந்துத்துவ பயங்கரவாத ஆக்டோபஸ் கரங்கள் இந்தியா முழுவதும் நீண்டுள்ள தகவல்கள் நாட் டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிப்பு நிகழ்ந் தது. ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் தொழுகை செய்யும் அந்தப் பள்ளி வாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த் தியது, அதில் பலர் பலியானார்கள். பதற்றம் அடைந்த மக்கள் அங்கு மிங்கும் ஓடினர். ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடக்க காவல்துறை கொடூரமான முறைகளைக் கையாண் டது. முஸ்லிம் இளைஞர்கள் மூர்க்கத் தனமாக தாக்கப்பட்டனர். குண்டுவெடிப் பில் இறந்தவர்களை விட அதிகமாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்த வர்களே அதிகம் என்ற நிலை ஏற்பட்ட தால் மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளிவாசலில் குண்டுவெடித்தால் என்ன? அதற்கும் முஸ்லிம் இளைஞர் களைத்தான் வளைத்துப் பிடிப்போம், ஏனெனில் சொந்த வீட்டில், ஏன் தனக்குத் தானே குண்டு வைத்துக் கொள்ளும் கோமா ளிக் கிறுக்கர்களா கவே முஸ்லிம் களைக் கருதுகி றோம் என சொல்லா மல் சொல்லும் வித மாக முஸ்லிம் களைத் துன்புறுத் தும் கொடுமையையும் ஆந்திர காவல் துறையினர் நிகழ்த்தினார்கள். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அறி வித்த டாக்டர் ராஜசேகர ரெட்டியின் இமேஜ் பொடிப் பொடியாய் நொறுங் கியது. குஜராத் இனப் படுகொலையை தவிர்த்து விட்டுப் பார்த்தால் முஸ்லிம் களைக் கருவறுக்கும் வேலைகளை செய்வதில் இந்திய மாநிலங் களிலேயே முதலிடத்தை மகாராஷ்டிர மாநில அரசும், இரண்டாவது இடத்தை ஆந்திராவும் பெற்று விட்ட தாக அன்றே மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந் தனர். உண்மை அறியும் குழுவினரைக் கூட கைது செய்து கொடுமை செய்யும் அளவுக்கு ஆந்திர அரசின் மூர்க்கத் தனம் இருந்தது. ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு செல்லும் போக்கு உண்மைக் குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்து டன் இல்லை என நடு நிலையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் முஸ்லிம்கள் நிறைந்த மாலேகானில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. பள்ளிவாசல் களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. முஸ்லிம்கள் அதிகமாக பலியான நிகழ் விலும் கூட முஸ்லிம்களை பலிகடா வாக்கிய கொடூரங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து மக்களின் நம்பிக்கை தகர்ந் தது. இந்த நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சங்பரிவார் பயங்கரவாதி பெண் சாமியார் பிரக்யாசிங் மற்றும் முன்னாள், இந்நாள் ராணுவ அதிகாரிகளின் கைவரிசை இருப்ப தாக செய்திகள் வெளிவரத் தொடங்கி யதை அடுத்து மகாராஷ்டிர மாநில தீவிர வாத தடுப்புப் படையின் அதிரடி புலனாய்வின் சிக்கிய சங்கும்பல் தீவிர விசா ரணை வளையத்தில் சிக்கியது.
அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப் பிலும் இந்த காவி பயங்கரவாதிகளின் தொடர்பு இருக்கலாம் என பூர்வாங்க சந் தேகத்தை ஆந்திர காவல்துறை எழுப்பியதோடு, அது குறித்த விசாரணையிலும் குதித்திருக்கிறது. இதற்காக பெண் சாமியார் பிரக்யா சிங் விசாரிக்கப்படுவார் என ஆந்திர காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இது குறித்து மும்பை சென்று மகாராஷ்டிர காவல்துறை அதிகாரிகளை சந்தித்து புலனாய்வு குறித்து தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியா கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெண் சாமியார் உள்ளிட்ட சங்பயங்கரவாதிகள் ஆந்திர காவல்துறையினரால் விசாரிக்கப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கிடுக்கிப் பிடிக்குள் வி.ஹெச்.பி.
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக சங்பரி வார் சதிகாரர்கள் தொடர்ந்து சிக்கிவரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மகாராஷ்டிர மாநில காவல் துறையினர் தீவிர புலனாய்வில் இறங்கியிருப்பதாக தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்திருக்கிறார். முன்னாள் ராணுவ புல்லுருவி குல்கர்னியுடன் குஜராத் மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களுடனான சதித் தொடர்பு குறித்தும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததை யடுத்து குஜராத் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் தீவிர விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பில் தொகாடியாவுக்கு தொடர்பு! சந்தி சிரிக்கிறது தேசப்பற்று!!


இந்திய நாட்டின் இறையாண்மைக்கு கெடுதல் விளைவிக்கும் செயலை நாளும் இழைத்து வரும் சங் பரிவார் கும்பலின் சதிச் செயல்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளன.



தாங்கள் சுத்த யோக்கியர்கள் போலும் தேசப் பற்றுக்கே நாங்கள்தான் சான்றி தழ் வழங்குவோம் என்றும் தருக்குடன் கூறிக் கொண்டிருந்தவர்கள், தங்க ளைத் தவிர மற்றவர்கள் மீது சந்தேகம் தோன்றும் வண்ணம் துவேஷக் கதை களை பரப்பி வந்தனர்.



அப்பாவி இந்துக்களை ஏமாற்று வதையே கடந்த அறுபதாண்டுகளாக தொடர்ந்து வந்தனர். அதனால் நாடெங் கும் பெரும் வன்முறைகளை நிகழ்த்தி னர். வன்முறைகளில் நாட்டின் பெரு மைக்கு சான்றாக விளங்கிய முஸ்லிம் கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.



இந்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றிய அந்த சமூகம் குற்றப் பரம்பரை யினர் போல் நடத்தப்பட்டனர்.



ஊடகங்களும் கூட இந்த பாரபட்ச போக்கை கவனம் பிசகாது கடைப்பிடித்தன.



சத்தியம் ஒருநாள் வென்றே தீரும் என்பதை நிரூபிக்கும் விதமாக சமீப கால நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.



செப்டம்பர் 29ல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு சதிச் செயல் தொடர் பாக சங் பரிவார் சதிகாரர்கள் வகையாய் மாட்டிக்கொண்டனர்.



பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடு வான் என்ற பழமொழிக்கேற்ப சங் பயங்கரவாதிகள் தொடர்ந்து சதிச் செயல் தொடர்பாக மகாராஷ்ட்ர மாநில தீவிரவாத தடுப்புப் படையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர்.



காலகாலமாக பரப்பப்பட்ட கட்டுக் கதைகள் அம்பலமாயின. சங் பரிவார் சதிகாரர்கள் இந்நாட்டையும் மக்களையும் எந்த அளவு ஏமாற்றியிருக்கின்றனர் என்பது தெளிவானது. இந்தியாவே அதிர்ச்சியில் உறைந்து போனது.



இவர்கள் தங்களது பிற்போக்குத்தன மான மதவெறியை, இழிவான முறையில் பரப்பினர்.



சாமியார்கள் பயங்கரவாத சாமியார் களாக மாறினர். ராணுவத்திலும் கூட பயங்கரவாத நச்சு சிந்தனைகள் ஊடுரு வின. உத்வேகம் பெற்றன. ஓய்வு பெற்ற உபாத்யாய்கள், சமீர் குல்கர்னிகள் போதாதென்று பணியிலிருக்கும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹிதுகள் அப்பாவிகளை குண்டு வைத்து கொலை செய்து நாட்டையே அவமானத்தில் ஆழ்த்தியிருக் கிறார்கள்.



சங்பரிவார் சதிவலைகள் தொடர்ந்து வரும் நிலையில் விடிந்தால் எந்த சங் கும்பல் தலைவன் சிக்குவானோ என்று மக்கள் தினமும் ஆவலாய் எழுகின்றனர்.


பெண் சாமியார் பிரக்யாசிங் போன்ற வர்கள் அப்பாவி மக்களின் ஆன்மீக பலவீனங்களை பயன்படுத்தி தீவிர வாதத்தை வளர்த்தனர்.


இந்நிலையில் இதுவரை பெரிய முத லைகள் சிக்காத நிலையே நீடித்தது. சில்லறை தேவதைகள் மட்டுமே பிடிபட்ட நிலையில் முதன்முறையாக ஒரு காவி முதலை, திரிசூலம் தூக்கும் ஒரு ரவுடிக் கும்பலின் தலைவனும் மாலேகான் சதி வழக்கில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரவிண் தொகாடியா என்ற அந்த விஷ பிரமுகர், தனது குதர்க்க புத்தியால் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தார்.


மதவெறி கூட்டங்களில் திரிசூலங் களை பகிரங்கமாக வழங்கி வன்முறை கொப்பளிக்க பேசியவர், திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிம்களையும் மற்றொரு முனை கிறிஸ்தவ மக்களையும் மூன்றா வது முனை சமாதானம் பேசும் ஹிந்துக் களையும் கொல்வதற்கு என்று ஏகடியம் பேசியவர் அந்த புண்ணியவான்(!) தற்போது மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர் என்றும் முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொலை செய்ய கொள்ளை கொள்ளையாய் பணம் அள்ளிக் கொடுத்தவர் என்றும் தீவிரவாத தடுப்புப்படை இவரைப்பற்றி தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து தொகாடியாவை தூக்கில் போடு என இந்தியாவெங்கும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வி.ஹெச்.பி. அமைப்பில் இருந்து விலகிய சாமியார்


உ.பி. யைச் சேர்ந்த சாமியார் லட்சுமி சங்கர் ஆச்சாரியா, இவர் விசுவ இந்து பரிசத் அமைப்பில் தீவிர உறுப்பினராகவும் பிரச்சாரகராகவும் செயல்பட்டு வந்தார். பிறகு மனம் திருந்தி அந்த அமைப்பில் இருந்து விலகி விட்டார். இஸ்லாம் தீவிர வாதமா அல்லது சாந்தியா? என்ற தலைப்பில் இவர் இந்தியில் ஒரு நூல் எழுதியுள்ளார். இந்த நூலில் இஸ்லாம் அமைதியை நிலைநாட்டும் மார்க்கம் என்பதை தெளிவாக அவர் எடுத்துக் காட்டியுள்ளார். விரைவில் வெளிவரவுள்ள அந்த நூலின் பிரதியை தமுமுக தலைவரிடம் லக்னோ அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில் அளித்தார். அருகில் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் சுலைமான் (வலது புறம்) உள்ளார்.

Saturday, November 22, 2008

டிசம்பர் 6-ல் ரயில் மறியல் போராட்டம்! இந்தியா முழுதும் போராட்டத்தை விரிவுப்படுத்த முயற்சி!!தலைமைக் கழகம் அறிவிப்பு!!போர்கால அடிப்படையில் பணிகள் தொடக்க


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு நவம்பர் 7 அன்று சென்னையில் நடை பெற்றது. பேராசியர் டாக்டர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலை மையில் நடைபெற்ற தலைமை நிர்வாகி களும், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச் செயலாளர்களும் கலந்துக் கொண்டனர்.


இதில் டிசம்பர் 6-ல் என்ன வகையான போராட்டத்தை அறிவிப்பது என்று ஆலோ சிக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனை களில் இறுதியாக ரயில் மறியல் போராட்டத்தை வீரியத்தோடு நடத்து வது என்று முடிவு செய்யப்பட்டது.


மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் போராட்டங்கள் நடத்துவது என்றும் ரயில்கள் செல்லும் ஊர்களில் மறியல் நடத்துவது என்றும், ரயில்கள் இயங்காத இடங்களில் ரயில் நிலையங்கள் செயல்பட்டால் அங்கு முற்றுகைப் போராட்டமாக மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதோடு, பாபர் மஸ்ஜித் போராட் டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்றும் முயற்சியாக, கடந்த 2004 - டிசம்பர் 6-ல் தமுமுக டெல்லியில் பேரணி - மாநாடு நடத்தியதைப் போல, இவ்வருடமும் இந்தியா முழுவதும் போராட்டத்தை விரி வுப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப் படையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தோழமை முஸ்லிம் அமைப்பு களுக்கு கடிதம் எழுதி, அந்தந்த மாநில தலை நகரங்களில் அவர்களின் சக்திகேற்ப போராட்டத்தை நடத்த அறிவுறுத்து வது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கான சுவர் விளம் பரங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட் டிகள், தெருமுனைப் பிரச் சாரங்கள், வாகன ஒலிபெருக்கி பிரச் சாரங்கள், களப் பணி ஆகியவற்றை போர்கால அடிப்படை யில் தொடங்கிட வேண்டும் என இயக்க தோழர் களை தலைமைக் கழ கம் வலியுறுத்தியுள்ளது.
டிசம்பர் 6 ரயில் மறியல் போராட்டம் விளம்பரங்களை எழுச்சியுடன் செய்ய வேண்டும் என்றும், உடனடியாக பணி களை தொடங்க வேண் டும் என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.


(அறிவிக்கப்ட்ட 24 மணி நேரத்தில் சுவர் விளம்பரத்தில் முந்திக் கொண்டது திருச்சி மாநகரம்)

இந்த அறிவிப்பு தமுமுக சகோதரர் களையும் சமுதாய ஆர்வலர்களையும் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தி; அவர் களை வீரியமும், உற்சாகமும் கொள்ள வைத்திருக்கிறது என பல முனை தகவல்களும் தெரிவிக்கின்றன.